ஓடும் பஸ்சில் பெண்ணிடம் திருட முயன்றவர் கைது


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் திருட முயன்றவர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2021 1:51 AM IST (Updated: 30 Aug 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே அடைக்கலபட்டணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நெல்லையில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் நெல்லையில் இருந்து தென்காசி பஸ்சில் தனது ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ஆலங்குளத்தை கடந்து பஸ் சென்றபோது, அந்த பெண்ணின் அருகில் இருந்த மற்றொரு பெண் நைசாக அடைக்கலபட்டணம் பெண்ணின் கைப்பையை திறந்து, அதில் இருந்த மணிபர்சை திருட முயன்றார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அடைக்கலபட்டணம் பெண் கூச்சலிட்டார். இதையடுத்து கையும் களவுமாக பிடிபட்ட பெண்ணை பாவூர்சத்திரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் மானாமதுரை சர்க்கஸ் காலனியைச் சேர்ந்த செல்வம் மனைவி காளியம்மாள் (வயது 29) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story