தமிழக வாலிபர் கழுத்தை அறுத்து கொலை
ராமநகர் அருகே தமிழக வாலிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மா்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:
வாலிபர் கொலை
ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா குனசனஹள்ளி கிராமம் அருகே தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லைப்பகுதி இருக்கிறது. தமிழக எல்லை பகுதியில் உள்ள கலிபண்டே கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 35). இவர், நேற்று முன்தினம் மாலையில் குனசனஹள்ளி கிராமத்தில் உள்ள மதுபான விடுதி முன்பாக சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் 4 மர்மநபர்கள் வந்தனர்.
பின்னர் அந்த மா்மநபர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சங்கரை தாக்கினார்கள். மேலும் சங்கரின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டார்கள். இதில், பலத்தகாயம் அடைநத சங்கர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கோடிஹள்ளி புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பழிக்கு பழியாக...
போலீசார் விரைந்து வந்து சங்கரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சங்கரும், அவரது நண்பர்களும் சேர்ந்து கடந்த 3 மாதத்திற்கு முன்பு சென்னகிருஷ்ணா என்பவரை கொலை செய்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலைக்கு பழிக்கு பழியாக சங்கர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதாவது சங்கரை சென்னகிருஷ்ணாவின் மகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சங்கரை கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கோடிஹள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகி விட்ட மா்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story