ஆட்டுக்கிடா சண்டை நடத்திய 6 பேர் கைது
கடையநல்லூரில் ஆட்டுக்கிடா சண்டை நடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் ஆட்டுக்கிடா சண்டை நடத்திய 6 பேைர போலீசார் கைது செய்தனர்.
ஆட்டுக்கிடா சண்டை
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் ஆட்டுக்கிடாக்களை மோத விட்டு, அவற்றில் வெற்றி பெறுவது எது? என்பது குறித்து பணம் வைத்து சூதாடுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், கடையநல்லூர் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கடையநல்லூர் பேட்டை சாலா பேரிகுளம் அருகில் உள்ள மைதானத்தில் நேற்று முன்தினம் 2 ஆட்டுக்கிடாக்களை மோத விட்டு, அவற்றின் மீது பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
6 பேர் கைது
உடனே கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு ஆட்டுக்கிடாக்களை மோத விட்டு, பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த 2 ஆட்டுக்கிடாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஆட்டுக்கிடா சண்டை நடத்தியதாக கடையநல்லூரைச் சேர்ந்த அப்துல் ஹக்கிம் மகன் சதாம் உசேன் (வயது 28), செய்யது இப்ராகிம் மகன் பீர் முகம்மது தாபித் (27), ஜாகீர் உசேன் மகன் ஷேக் முகம்மது அலி (28), அசன் முகம்மது மகன் ரிஷிகான் (21), காஜாமைதீன் மகன் முகம்மது அஸ்கர் (21) மற்றும் 18 வயது வாலிபர் ஆகிய 6 பேர் மீது மிருகவதை தடை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story