கொரட்டூர் ஏரியை மாசுபடுத்துவோர் மீது நடவடிக்கை; பசுமை தீர்ப்பாயம் உத்தரவு


கொரட்டூர் ஏரியை மாசுபடுத்துவோர் மீது நடவடிக்கை; பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
x
தினத்தந்தி 30 Aug 2021 3:02 PM IST (Updated: 30 Aug 2021 3:02 PM IST)
t-max-icont-min-icon

சென்னை கொரட்டூர் ஏரியை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அங்கு கழிவுநீர் விடப்படுவதாகவும் வெளியான புகாரை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது.

இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நிபுணர் குழுவை அமைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்தநிலையில் மீண்டும் அந்த வழக்கு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கொரட்டூர் ஏரியில் இருந்து 8 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது தெரிகிறது. இதன்மூலம் ஏரியில் விதிகளை மீறி குப்பைகள் கொட்டப்படுவது உறுதியாகி உள்ளது. ஏரியை மாசுபடுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரத்தை சென்னை கலெக்டர், சென்னை மாநகராட்சி நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை செப்டம்பர் 16-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story