பெரம்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு


பெரம்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு
x
தினத்தந்தி 30 Aug 2021 3:36 PM IST (Updated: 30 Aug 2021 3:36 PM IST)
t-max-icont-min-icon

தெற்கு ரெயில்வேக்குட்பட்ட பெரம்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் கொரோனா 3-வது அலை முன்னெச்சரிக்கை ஏற்பாடாக குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.

இந்த வார்டில் 60 படுக்கைகள், 8 ஐ.சி.யூ படுக்கைகள் உள்பட சிகிச்சை அளிப்பதற்கு தேவையான நவீன மருத்துவ உபகரணங்களும் உள்ளன. மேலும், குழந்தைகளின் அச்சத்தை போக்க சுவர்களில் கண்களை கவரும் வண்ண ஓவியங்கள், டி.வி, விளையாட்டு பொருட்கள் உள்பட குழந்தைகள் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை அளிக்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், குழந்தைகளின் தாய்மார்கள் தங்கும் வகையில் அவர்களுக்கென தனியாக கூடுதல் படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பழைய ரெயில்வே ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை ஜான்தாமஸ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கொரோனா காலக்கட்டத்தில் பணிபுரிந்து வரும் டாக்டர்கள், நர்சுகளை பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ரெயில்வே உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story