திருத்தணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
திருத்தணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் போன்றவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வீட்டின் பூட்டு உடைப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவை சேர்ந்த திருவாலங்காடு ஒன்றியம் சக்கரமநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி. கட்டிட தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி வங்கியில் பணம் எடுப்பதற்காக வீட்டை பூட்டிக்கொண்டு சென்றார். மீண்டும் வங்கியில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நகை- பணம் திருட்டு
இது குறித்து வேலைக்கு சென்றிருந்த தனது கணவருக்கு அவர் தகவல் தெரிவித்தார். ரஜினி வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.25 ஆயிரம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து ரஜினி திருவாலங்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் போன்றவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story