தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய விழா கொடியேற்றம்


தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய விழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 30 Aug 2021 12:56 PM GMT (Updated: 2021-08-30T18:26:06+05:30)

தூத்துக்குடி தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய விழா கொடியேற்றம் நடந்தது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனி தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் பிஷப் ஜூடு பால்ராஜ் கலந்து கொண்டு அன்னையின் கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், திருப்பலிகளும் சபைமக்கள் பங்கேற்பு இன்றி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 5-ந் தேதி மாலை 6 மணிக்கு திவ்விய நற்கருணை பெருவிழா, தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜெரோசின் அ.கற்றார், மற்றும் பக்த சபைகள், பங்கு பேரவையினர் இணைந்து செய்து உள்ளனர்.

Next Story