வேலூர் மாநகராட்சி பகுதியில் 16 இடங்களில் ரூ.235 கோடியில் குடிநீர் திட்ட பணிகள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

வேலூர் மாநகராட்சி பகுதியில் 16 இடங்களில் ரூ.235 கோடியில் குடிநீர் திட்ட பணிகள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 30 Aug 2021 1:17 PM GMT (Updated: 30 Aug 2021 1:17 PM GMT)

வேலூர் மாநகராட்சி பகுதியில் 16 இடங்களில் ரூ.235 கோடியில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

காட்பாடி

வேலூர் மாநகராட்சி பகுதியில் 16 இடங்களில் ரூ.235 கோடியில் நிறைவேற்றப்பட்ட குடிநீர் திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

குடிநீர் திட்டப்பணிகள்

வேலூர் மாநகராட்சி பகுதியில் மத்திய அரசின் அம்ரூத் குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த 2017-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.234.93 கோடியில் மாநகராட்சி பகுதியில் குடிநீர் தொட்டிகள், குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடந்தது. வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி, தொரப்பாடி, சங்கரன் பாளையம் உள்பட 16 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது.

இந்த மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

70,795 குடும்பங்கள்

அதைத்தொடர்ந்து காட்பாடி கழிஞ்சூர் இ.பி.காலனியில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டி அருகே நடந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் சங்கரன் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியஅதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் 16 இடங்களில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்துள்ளார். மொத்தம் 222 கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிநீர் குழாய்கள் மாநகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 70 ஆயிரத்து 795 குடும்பங்கள் பயன்பெறும் என்றனர்.

Next Story