வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 50 ஏக்கரில் கால்நடை தீவன பயிர் வளர்ப்பு


வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 50 ஏக்கரில் கால்நடை தீவன பயிர் வளர்ப்பு
x
தினத்தந்தி 30 Aug 2021 6:48 PM IST (Updated: 30 Aug 2021 6:48 PM IST)
t-max-icont-min-icon

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 50 ஏக்கரில் கால்நடை தீவன பயிர் வளர்க்கப்பட்டு வருவதாக வேலூர் மண்டல இணை இயக்குனர் தெரிவித்தார்.

வேலூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 50 ஏக்கரில் கால்நடை தீவன பயிர் வளர்க்கப்பட்டு வருவதாக வேலூர் மண்டல இணை இயக்குனர் தெரிவித்தார்.

கால்நடை தீவனம்

மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2020-2021-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் கால்நடைத்துறைக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களில் கால்நடைத்துறையும், ஊரக வளர்ச்சி துறையும் இணைந்து 100 நாள் வேலைதிட்ட தொழிலாளர்கள் மூலம் தீவன பயிர் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் தீவன பயிர் பயிரிடப்பட்டுள்ளது. 
இதுகுறித்து வேலூர் மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:-

50 ஏக்கரில்

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் உள்ளது. தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் பொன்னை அருகே கொண்டநாயக்கன்பாளையம், ராணிப்பேட்டை மாவட்டம் லாலாவரம், நாட்டறம்பள்ளி அருகே மல்லகுண்டா ஆகிய பகுதிகளில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் கொழுக்கட்டை புல், முருங்கை, அகத்தி, வேம்பு போன்ற கால்நடை தீவன வகைகள் பயிரிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நடப்பாண்டில் இதற்கென தமிழக அரசு ரூ.4 கோடியே 82 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது. அந்த நிதி மூலம் மாவட்டத்தில் உள்ள பிற மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களில் தீவன பயிர்கள் பயிரிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மேய்ச்சல் நிலம் குறித்த ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தீவன பயிரிடப்பட்ட இடத்தில் 4 ஆயிரம் பனை விதைகள் நடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story