வேலூரில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு ‘குவா, குவா’


வேலூரில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு ‘குவா, குவா’
x
தினத்தந்தி 30 Aug 2021 7:11 PM IST (Updated: 30 Aug 2021 7:11 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு ‘குவா, குவா’

வேலூர்

வேலூர் மாவட்டம் பாலமதி அருகே உள்ள சிட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் குணால், தொழிலாளி. அவரது மனைவி ஜோதி (வயது 24). இவர் 2-வது முறையாக கர்ப்பமானார். 

நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று காலை திடீரென பிரசவவலி ஏற்பட்டது. 

அதைத்தொடர்ந்து பகல் 12.20 மணி அளவில் ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் அங்கு சென்று அவரை ஏற்றிக்கொண்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு நோக்கி சென்றது. ஆம்புலன்சை டிரைவர் சரவணன் ஓட்டிச் சென்றார்.

பாகாயம் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்த போது ஜோதிக்கு பிரசவவலி அதிகமானதால் ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மருத்துவ உதவியாளர் மணிகண்டன் பிரசவம் பார்த்தார். இதில் ஜோதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து தாயும், சேயும் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story