ஆரணி அருகே; நட்சத்திர மிட்டாய் சாப்பிட்ட 3 பேர் மயக்கம்
ஆரணி அருகே நட்சத்திர மாத்திரை மிட்டாய் சாப்பிட்ட 3 சிறுவர்கள் மயக்கமடைந்தனர்.
ஆரணி
ஆரணி அருகே நட்சத்திர மாத்திரை மிட்டாய் சாப்பிட்ட 3 சிறுவர்கள் மயக்கமடைந்தனர்.
மாத்திரை மிட்டாய்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் ஊராட்சியை சேர்ந்தவர் அரி, கூலித்தொழிலாளி. இவருடைய மகன்கள் மகேஷ் (வயது 11), தனஞ்செழியன் (9), புருஷோத்தமன் மகன் யுவராஜ் (8).
இவர்கள் 3 பேரும் அங்குள்ள பெட்டிக்கடையில் நட்சத்திர மிட்டாய் வாங்கி உள்ளனர். ஒவ்வொருவரும் 50 மாத்திரை மிட்டாய்கள் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
வீட்டுக்கு செல்லும் வழியிலேயே மிட்டாய்களை சாப்பிட்ட அவர்களுக்கு, வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் மயக்க நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக அவர்களை ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சென்று சிறுவர்கள் நட்சத்திர மிட்டாய் வாங்கிய பெட்டிக்கடை உரிமையாளரை அழைத்து விசாரித்தனர்.
அப்போது அனைத்தும் மொத்த விற்பனை கடைகளிலும் இந்த மாத்திரை மிட்டாய் விற்கப்படுவதாகவும், மிட்டாய் சாப்பிட்டதால் மயக்கம் ஏற்பட்டிருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆய்வுக்கு...
இதுபற்றி திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன் கூறுகையில் சிறுவர்கள் 3 பேரும் நட்சத்திர வடிவிலான மிட்டாயை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் சாப்பிட்டதாக கூறப்படும் மிட்டாய் வகைகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பப்படும்.
அதேபோன்று சிறுவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பண்டங்களை கண்டறிந்து பறிமுதல் செய்யப்படும் என்றார்.
Related Tags :
Next Story