திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 30 Aug 2021 7:35 PM IST (Updated: 30 Aug 2021 7:35 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு வருகிறது. 

அதன்படி கடந்த 27-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை. 

இதனால் கோவிலின் கோபுர வாயில்கள் அடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 

அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டதில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Next Story