செந்துறை அருகே கிணற்றில் விழுந்த காட்டெருமை மீட்பு
செந்துறை அருகே கிணற்றில் விழுந்த காட்டெருமை மீட்கப்பட்டது.
செந்துறை:
செந்துறை அருகே ராக்கம்பட்டியில் அப்பாவு என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் சுமார் 40 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தற்போது தண்ணீர் இல்லை.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த கிணற்றில் காட்டெருமை ஒன்று தவறி விழுந்தது. இதற்கிடையே நேற்று காலை அப்பாவு தனது மாந்தோப்பிற்கு வந்தார். அப்போது கிணற்றில் இருந்து காட்டெருமை கத்தும் சத்தம் கேட்டது. இதுகுறித்து அப்பாவு, அய்யலூர் வனத்துறை அதிகாரிகளுக்கும், நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் வனத்துறை அலுவலர் குமரேசன் தலைமையிலான வன பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் விழுந்த காட்டெருமையை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அந்த காட்டெருமை பிள்ளையார் நத்தம் வனப்பகுதியில் விடப்பட்டது.
Related Tags :
Next Story