மாவட்ட செய்திகள்

பீட்ரூட் சாகுபடி தீவிரம் + "||" + Intensity of beetroot cultivation

பீட்ரூட் சாகுபடி தீவிரம்

பீட்ரூட் சாகுபடி தீவிரம்
கம்பம் பகுதியில் பீட்ரூட் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது.
கம்பம்: 

கம்பம், நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம், சாமாண்டிபுரம், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வாழை, திராட்சை, பீட்ரூட், முள்ளங்கி, கொத்தமல்லி, புடலை, பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளை பயிர் செய்து வருகின்றனர். இதற்கு 4 நாட்களுக்கு ஒரு முறை அவசியம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 

இதற்காக கிணற்றுப்பாசனத்தின் மூலம் வாய்க்கால் அமைத்து தண்ணீர் பாய்ச்ச அதிக தண்ணீர் தேவைப்படுகின்றது. அவற்றில் தண்ணீர் பற்றாக்குறைவான இடங்களில் காய்கறி விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கம்பம் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் மத்திய, மாநில அரசு மானியத்தின் மூலம் சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசனம் அமைத்துள்ளனர். இதன் மூலம் பீட்ரூட் சாகுபடி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். 


இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, தெளிப்பு நீர் பாசனத்தின் மூலம் பயிர் செய்யும் போது வழக்கமாக கிடைக்கும் மகசூலைவிட கூடுதல் மகசூல் கிடைக்கிறது. மேலும் தண்ணீர் பாய்ச்ச ஆட்கள் தேவையில்லை. தண்ணீரும் குறைந்த அளவே செலவாகிறது என்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. உரக்கடைகளில் வேளாண் அதிகாரி ஆய்வு
கம்பம் பகுதியில் உரக்கடைகளில் வேளாண் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.