பள்ளி, கல்லூரிகளில் செயல்பட்டு வந்த தற்காலிக கொரோனா வார்டுகள் அப்புறப்படுத்தும் பணி


பள்ளி, கல்லூரிகளில் செயல்பட்டு வந்த தற்காலிக கொரோனா வார்டுகள் அப்புறப்படுத்தும் பணி
x
தினத்தந்தி 30 Aug 2021 3:57 PM GMT (Updated: 30 Aug 2021 3:57 PM GMT)

பள்ளி, கல்லூரிகளில் செயல்பட்டு வந்த தற்காலிக கொரோனா வார்டுகள் அப்புறப்படுத்தும் பணி

திருப்பூர்,
பள்ளிகள் நாளை திறக்க உள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளில் செயல்பட்டு வந்த தற்காலிக கொரோனா வார்டுகள் அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 
தற்காலிக கொரோனா வார்டுகள் 
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை மிக தீவிரமாக இருந்து வந்தது. இதனால் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டதால் அரசு மருத்துவமனைகள் பல மாவட்டங்களில் நிரம்பி வழிந்தன. இதுபோல் ஆக்சிஜன் படுக்கைகளுக்கும் பலர் திண்டாடி வந்தனர். இதன் காரணமாக கொரோனா படுக்கைகள் அனைத்து மாவட்டங்களிலும் அதிகரிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. இதற்கிடையே கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. 
பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்ததால் அதனை தற்காலிக கொரோனா வார்டுகளாக அமைக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குமரன் கல்லூரி உள்ளிட்ட பள்ளி, கல்லூரிகள் பலவற்றில் படுக்கை வசதி செய்யப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆக்சிஜன் படுக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன் மூலம் பலர் பயனடைந்தனர். 
அப்புறப்படுத்தும் பணி...
இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதால் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு ஆலோசனை செய்தது. அதன்படி நாளை (புதன்கிழமை) முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டு, அதனை பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் மாநகரில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொரோனா வாா்டுகள் அப்புறப்படுத்தும் பணி நடந்தது. மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த படுக்கைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதுபோல் அறைகளும் சுத்தம் செய்யப்பட்டன.  

Next Story