சின்னவாளவாடி கிராமத்தில் கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா


சின்னவாளவாடி கிராமத்தில் கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
x
தினத்தந்தி 30 Aug 2021 9:35 PM IST (Updated: 30 Aug 2021 9:35 PM IST)
t-max-icont-min-icon

சின்னவாளவாடி கிராமத்தில் கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

தளி, 
உடுமலையை அடுத்த சின்னவாளவாடி கிராமத்தில் கிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணர் தம்பதி சகிதமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். பழமை வாய்ந்த இந்த கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. காலை 8 மணிக்கு சுதர்சன ஹோமத்துடன் விழா தொடங்கியது. 10 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் திவ்ய அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.  
 அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தம்பதி சகிதமாய் வேணுகோபால கிருஷ்ணர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4 மணிக்கு மங்கள வாத்தியம் முழங்க பஜனை குழுவினருடன் தேரில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் புரிந்தார். மாலை 6 மணிக்கு உரியடி உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது. இந்த விழாவில் உள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.  

Next Story