பள்ளிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளதையொட்டி பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன.

பள்ளிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளதையொட்டி பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன.
x
தினத்தந்தி 30 Aug 2021 9:36 PM IST (Updated: 30 Aug 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளதையொட்டி பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன.

உடுமலை, 
 பள்ளிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளதையொட்டி பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன.
பள்ளிகள் திறப்பு
கொரோனா 2-வது அலையின் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள்மூடப்பட்டுள்ளன. தலைமையாசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில்தற்போது கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. 
இதைத்தொடர்ந்து அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நாளை (புதன்கிழமை) முதல், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. உடுமலை கல்வி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 16-ம், அரசு உதவிபெறும் பள்ளிகள் 5-ம், அரசு உயர்நிலைப்பள்ளிகள்17-ம் என மொத்தம் 38 பள்ளிகள் உள்ளன.
சுத்தம்செய்யும் பணி
பள்ளிகள்திறக்கப்படாமலிருந்ததால் சில பள்ளி வளாகங்களில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடந்தது. இந்த நிலையில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளி வளாகங்களில் புதர் மண்டி கிடந்ததது.அங்கு இருந்த செடி,கொடிகள்  அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story