மீண்டும் கடத்தப்பட்ட சிறுமி


மீண்டும் கடத்தப்பட்ட சிறுமி
x
தினத்தந்தி 30 Aug 2021 4:53 PM GMT (Updated: 2021-08-30T22:23:34+05:30)

போடி அருகே 15 வயது சிறுமி மீண்டும் கடத்தப்பட்டார். அவரை கடத்திய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி : 


போடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன். இவன், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 15 வயது சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து. சிறுவனையும், சிறுமியையும் கண்டுபிடித்தனர். பின்னர் சிறுமியை காப்பகத்திலும், சிறுவனை மதுரை சிறுவர் கூர்நோக்கு பள்ளியிலும் சேர்த்தனர். 

இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி சிறையில் இருந்து வெளியே வந்த சிறுவன், மீண்டும் அந்த சிறுமியை தனது தாய் உதவியுடன் கடத்தி சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து போடி நகர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி வழக்குப்பதிவு செய்து சிறுமி, சிறுவன் மற்றும் அவனுடைய தாய் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர். 


Next Story