சாராயம் விற்பனை தந்தை மகன் உள்பட 4 பேர் கைது


சாராயம் விற்பனை தந்தை மகன் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2021 5:03 PM GMT (Updated: 2021-08-30T22:33:11+05:30)

அரகண்டநல்லூர் சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்பனை தந்தை மகன் உள்பட 4 பேர் கைது


திருக்கோவிலூர்

அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையிலான போலீசார் கோட்டை மருதூர் கிராமத்தில் உள்ள கொடுக்கப்பட்டு ஏரிக்கரையில் சாராய வேட்டை நடத்தினர். அப்போது அங்கு சாராயம் விற்றுக்கொண்டிருந்த கோட்டமருதூர் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி(வயது 61), இவரது மகன் சந்திரசேகர்(36) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 60 லிட்டர் சாராயம், 400 லிட்டர் சாராய ஊறல் ஆகியவற்றை பறிமுதல்செய்து அழித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால், சவுக்கத்தலி தலைமையிலான போலீசார் பாவளம், அரசராம்பட்டு பகுதிகளில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பாவளம் கிராமம் குளத்து மேட்டு அருகில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த சஞ்சீவ்காந்தி(வயது 42) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 15 லிட்டர் சாராயத்தையும், காட்டுக்கொட்டாய் பகுதியில் சாராயம் விற்ற அரசராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நாகமணி (வயது 49) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story