படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்


படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 30 Aug 2021 10:48 PM IST (Updated: 30 Aug 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டியில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 

அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. ஊட்டி அருகே பைக்காராவில் பனிமூட்டம் நிலவியது. ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியும், குடைகளை பிடித்த படியும் சவாரி செய்தனர். சாலைகளில் எதிரே வந்த வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கினர்.

நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-6.8, நடுவட்டம்-12, அவலாஞ்சி-26, அப்பர்பவானி-14, குன்னூர்-11, தேவாலா-23, பந்தலூர்-16, சேரங்கோடு-12, கூடலூர்-5 என மொத்தம் 195.8 மி.மீ. மழை பெய்து உள்ளது. 

Next Story