நீலகிரி மாவட்டத்தில் 5 லட்சத்து 63 ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா தடுப்பூசி
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 63 ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குறைந்த மக்கள் தொகை கொண்டது என்பதால், 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த முதன்மையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் ஆகிய 6 அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தற்போது தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. இதனால் வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசி
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 63 ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதில் முதல் டோஸ் 4 லட்சத்து 35 ஆயிரத்து 30 பேருக்கும், 2-வது டோஸ் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 213 பேருக்கும் போடப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 703 பேர், 45 வயது முதல் 60 வயது வரை ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 421 பேர்,
18 வயது முதல் 44 வயது வரை 2 லட்சத்து 51 ஆயிரத்து 119 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்டனர். நீலகிரியில் தடுப்பூசி செலுத்தியதில் 100 சதவீத இலக்கை எட்ட தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story