ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி


ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
x
தினத்தந்தி 30 Aug 2021 11:01 PM IST (Updated: 30 Aug 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதன்படி நேற்று 11 பேருக்கு மட்டும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று காரணமாக ஒருவர் பலியானார். மாவட்டம் முழுவதிலும்‌ அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 153 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்களில் முதல் தவணை தடுப்பூசிகள் 6 ஆயிரத்து 29 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 1,138 பேருக்கும் நேற்று போடப்பட்டது.

Next Story