வீடு புகுந்து நகை, பணம் திருட்டு


வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 30 Aug 2021 11:01 PM IST (Updated: 30 Aug 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

வீடு புகுந்து நகை, பணத்தை மா்ம மனிதா்கள் திருடி சென்று விட்டனா்.

செஞ்சி, 

விழுப்புரம் அருகே உள்ள முட்டத்தூரை சேர்ந்தவர் கருணாகரன் ( வயது 72). இவர்  நேற்று முன்தினம் காலையில் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் விழுப்புரம் சென்று விட்டார். 

இந்த நிலையில் அவரது வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம மனிதர்கள், 2 பவுன் நகை, 6 ஆயிரத்து 500 ரூபாயை திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story