வாலாஜாவில் சாலை பணியாளர்கள் சங்க வாயிற் கூட்டம்


வாலாஜாவில் சாலை பணியாளர்கள் சங்க வாயிற் கூட்டம்
x
தினத்தந்தி 30 Aug 2021 11:12 PM IST (Updated: 30 Aug 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

சாலை பணியாளர்கள் சங்க வாயிற் கூட்டம்

வாலாஜா

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் வாலாஜா உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு வாயிற் கூட்டம் நடந்தது. உட்கோட்ட தலைவர் தாண்டவமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் சோமு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளர் சிவசங்கரன் பங்கேற்று பேசினார். 

கூட்டத்தில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். உயிரிழந்த சாலைப்பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாரிசுகளுக்கு நெடுஞ்சாலைத்துறையில் கருணை அடிப்படையிலான அரசு பணி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களை திறன்மிகு இல்லா ஊழியர்களாக அறிவிப்பதோடு அவர்களுக்கு தர ஊதியம் ரூ.1,900 என மாற்றி அமைத்து புதிய ஊதிய நிர்ணயம் செய்து நிலுவைத்தொகை வழங்க வேண்டும். சாலைப் பராமரிப்பு பணிகளை தனியார் ஒப்பந்த முறையில் மேற்கொள்ளும் கொள்கை முடிவை ரத்து செய்து சாலைப்பணியாளர்கள் மூலமே பராமரிப்பு செய்வதை உறுதி செய்ய வேண்டும். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு நெடுஞ்சாலைத் துறையில் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

மேலும் வருகிற 7-ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பெருந்திரள் முறையீடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் துரை, வெங்கடேசன், வடமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உட்கோட்ட பொருளாளர் பழனி நன்றி கூறினார்.

Next Story