டாஸ்மாக் கடை முன் படுத்து உருண்ட தொழிலாளியை சரமாரியாக தாக்கிய பெண்
டாஸ்மாக் கடை முன் படுத்து உருண்ட தொழிலாளியை பெண் ஒருவர் சரமாரியாக தாக்கினார்.
கரூர்,
கரூர்-திண்டுக்கல் சாலையில் தாந்தோணிமலை மில் கேட் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. தற்போது மது பார்கள் இல்லாததால் மது பிரியர்கள் அந்தக்கடையில் இருந்து மதுவை வாங்கிக்கொண்டு சாலையோரம் மற்றும் புதர் மறைவில் மது அருந்திவிட்டு செல்கின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் 45 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் மது குடித்து விட்டு போதையில் நடக்க முடியாமல் டாஸ்மாக் கடை முன்பே படுத்து உலற ஆரம்பித்தார்.
இதை கேள்விப்பட்ட அந்த நபரின் உறவினர் பெண் ஒருவர் அவரை எழுப்ப பல்வேறு வழிகளில் முயன்றும் முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அந்த தொழிலாளியை சரமாரியாக தாக்கினார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் வேடிக்கை பார்த்தப்படி சென்றனர்.
Related Tags :
Next Story