அக்கரைப்பட்டியில் ரூ.6 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


அக்கரைப்பட்டியில் ரூ.6 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 30 Aug 2021 11:52 PM IST (Updated: 30 Aug 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

அக்கரைப்பட்டியில் நடந்த ஏலத்தில் 201 மூட்டை பருத்தி ரூ.6 லட்சத்துக்கு விற்பனையானது.

ராசிபுரம்:
பருத்தி ஏலம்
ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் அக்கரைப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. 
இதில் அக்கரைப்பட்டி, பொரசல்பட்டி, மல்லசமுத்திரம், மாமுண்டி, ராசாபாளையம், மதியம்பட்டி, நத்தமேடு, குருசாமிபாளையம், வெண்ணந்தூர், சவுதாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த சுரபி ரக பருத்தியை கொண்டு வந்து கலந்து கொண்டனர்.
ரூ.6 லட்சத்துக்கு விற்பனை
கோவை, அவிநாசி, திருப்பூர், ஆத்தூர், சேலம், மகுடஞ்சாவடி, எடப்பாடி, கொங்கணாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை போட்டி போட்டு எடுத்து சென்றனர். சுரபி ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 400 முதல் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 509 வரை ஏலம் போனது.
மொத்தம் 201 மூட்டை பருத்தி ரூ.6 லட்சத்துக்கு விற்பனையானது.

Next Story