ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் நகை, பணம் திருட்டு


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 30 Aug 2021 6:38 PM GMT (Updated: 2021-08-31T00:08:01+05:30)

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் நகை, பணம் திருட்டு போனது

புதுக்கோட்டை
சென்னையை சேர்ந்த லோகநாதனின் மனைவி சாந்தி (வயது 40). இவர் புதுக்கோட்டையில் உறவினர் ஒருவரது வீட்டிற்கு வந்திருந்தார். புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து புதுக்கோட்டைக்கு பஸ்சில் பயணம் செய்து வந்தார். அப்போது சாந்தி வைத்திருந்த கைப்பையில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுதொடர்பாக டவுன் போலீஸ் நிலையத்தில் சாந்தி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story