மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு ரூ.6 லட்சம் அபராதம் + "||" + Penalty

வாகன ஓட்டிகளுக்கு ரூ.6 லட்சம் அபராதம்

வாகன ஓட்டிகளுக்கு ரூ.6 லட்சம் அபராதம்
திருச்சி மாநகரில் முககவசம் அணியாத, போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்சி, ஆக.31-
திருச்சி மாநகரில் முககவசம் அணியாத, போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
சிறப்பு வாகன சோதனை மையம்
கொரோனா தொற்று பரவலை தடுத்திடும் வகையில் கடந்த 23-ந் தேதி முதல் வருகிற 6-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு சார்பில் நேற்று முன்தினம் மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அண்ணாசிலை ரவுண்டானா, மத்திய பஸ் நிலையம், மாம்பழச்சாலை சந்திப்பு, காந்திமார்க்கெட் சந்திப்பு, மேலப்புதூர் சந்திப்பு, தலைமை தபால்நிலையம் ஆகிய இடங்களில் சிறப்பு வாகன சோதனை மையம் அமைக்கப்பட்டு முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
ரூ.6 லட்சம் அபராதம்
நேற்று முன்தினம் அரசின் தடை உத்தரவை மீறி முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் 1200-க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 30 நபர்கள், சாலை விதிகளை மீறி ஹெல்மெட் அணியாமலும், சீட்பெல்ட் அணியாமலும் வந்த வாகன ஓட்டிகள் 2 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா 3-ம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாநகர போலீஸ் கமிஷனர் அருண் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. முன்பதிவு டிக்கெட் இன்றி நுழைந்த கபடி வீரர்களுக்கு அபராதம் விதிப்பு
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்குள் டிக்கெட் இன்றி நுழைந்த கபடி வீரர்களுக்கு அபராதம் விதித்ததால் அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
2. கொரோனா விதிமீறலுக்கு அபராதம்; அரசு எச்சரிக்கை
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
4. புளியஞ்சோலையில் மரங்களை வெட்டியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
புளியஞ்சோலையில் மரங்களை வெட்டியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
5. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.