திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 31 Aug 2021 12:57 AM IST (Updated: 31 Aug 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பட்டு உடுத்தி சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பஞ்ச பாண்டவர்களின் சிலையை தோளில் சுமந்து கொண்டு ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக கொண்டு சென்று தீமிதி திடலை சென்றடைந்தனர். அங்கு தீமிதித் திடலில் தீ பற்ற வைக்கப்பட்டது. இதையடுத்து வேண்டுதலை நிறைவேற்ற 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி சுமந்தும், அழகு குத்திக்கொண்டும், கரகம் ஏந்தியும், அவர்களது குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டும் ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்து திடலில் இறங்கி தீயில் நடந்து சென்று நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவில் அரியலூர், பெரம்பலூர், மேலப்பழுவூர், வாரணவாசி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story