ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2021 1:02 AM IST (Updated: 31 Aug 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

 திருவெறும்பூர்,ஆக.31-
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் துவாக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில விவசாய அணி செயலாளர் புலவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் பாலுசாமி, துவாக்குடி நகர செயலாளர் மோகன் பெரிய கருப்பன், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் திருமாவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் கண்டன உரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சாக்ரடீஸ், ஒன்றிய செயலாளர் பீட்டர், நிர்வாகிகள் வேலுச்சாமி, துரைசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story