ரூ.7.80 கோடியில் போலீசாருக்கு புதிய அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு


ரூ.7.80 கோடியில் போலீசாருக்கு புதிய அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு
x
தினத்தந்தி 31 Aug 2021 1:06 AM IST (Updated: 31 Aug 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

மானூரில் ரூ.7.80 கோடியில் போலீசாருக்கு புதிய அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு விழா நடந்தது.

மானூர்:
மானூரில் ரூ.7 கோடியே 80 லட்சம் செலவில் போலீசாருக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார். பின்னர் புதிய கட்டிடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் குத்துவிளக்கு ஏற்றினார்.
விழாவில் தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெருமாள்,  செயற்பொறியாளர் ஜெகநாதன், இளநிலை பொறியாளர் சரவணன், தொழிலதிபர் மின்னல் அலி, வியாபாரிகள் சங்க தலைவர்கள் மாயகிருஷ்ணன், முகமது அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story