கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 31 Aug 2021 1:12 AM IST (Updated: 31 Aug 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது

புதுக்கோட்டை
கிருஷ்ணர் பிறந்த நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி கிருஷ்ண ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டையில் விட்டோபா பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் கோவிலில் வேணுகோபாலன் சன்னதியில் கிருஷ்ணர் மற்றும் ராதை அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பலர் தங்களது குழந்தைகளை கிருஷ்ணர், ராதை வேடமிட்டு அழைத்து வந்திருந்தனர். இதேபோல ஸ்ரீநைனா ராஜூ தண்டாயுதபாணி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கிருஷ்ணர் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் கிருஷ்ணர், ராதை வேடமிட்ட குழந்தைகள் ஏராளமானோர் வந்திருந்தனர். மேலும் கிருஷ்ணர், ராதை வேடமிட்ட குழந்தைகள் ஊஞ்சலை அசைத்து ஆனந்தமடைந்தனர். கிருஷ்ணர் பக்தி பாடல்களும் பாடப்பட்டன.
இதேபோல பெருமாள் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு நடைபெற்றது. மேலும் வீடுகளில் பலர் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமணிந்து அழகு பார்த்தனர். வீடுகளில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர். கிருஷ்ணரை வரவேற்கும் விதமாக குழந்தைகள் மூலம் கால் தட கோலங்களை வரைந்திருந்தனர்.


Next Story