ஸ்ரீரங்கத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை


ஸ்ரீரங்கத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 31 Aug 2021 1:17 AM IST (Updated: 31 Aug 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஸ்ரீரங்கம், ஆக.31-
ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பஞ்சக்கரை குடிசை மாற்று வாரிய பகுதியை சேர்ந்தவர் சத்தியகிரி (வயது 28). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அனிதா (19) என்பவரை திருமணம் செய்து கொண்டார். சத்தியகிரிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சத்தியகிரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த அனிதா தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதைபார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக  திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story