மதுரை-செங்கோட்டை இடையே சாதாரண கட்டண ரெயில் இயக்க வேண்டும்-ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தல்


மதுரை-செங்கோட்டை இடையே சாதாரண கட்டண ரெயில் இயக்க வேண்டும்-ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 Aug 2021 1:50 AM IST (Updated: 31 Aug 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

மதுரை-செங்கோட்டை இடையே விரைவு ரெயில் கட்டணத்தில் பயணிகள் ரெயில்கள் இயக்கப்படும் நிலையில் சாமானிய, நடுத்தர மக்களுக்கு முழுமையான பலன் கிடைக்காத நிலையே தொடர்கிறது.

விருதுநகர்,

மதுரை-செங்கோட்டை இடையே விரைவு ெரயில் கட்டணத்தில் பயணிகள்ரெயில்கள் இயக்கப்படும் நிலையில் சாமானிய, நடுத்தர மக்களுக்கு முழுமையான பலன் கிடைக்காத நிலையே தொடர்கிறது.

பயணிகள்ரெயில்

ெரயில்வே நிர்வாகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும்ரெயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சிறப்புரெயில்கள் மட்டும் விரைவுரெயில் கட்டணத்தில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் சாதாரண கட்டண பயணிகள்ரெயில் தொடர்ந்து இயக்கப்படுவதில்லை. இதனால் சாமானிய, நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
 இது குறித்து பல்வேறு அமைப்புகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்தியரெயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தியும் அதனை கண்டு கொள்ளாத நிலையிலேயே உள்ளனர்.
இந்த நிலையில்ரெயில்வே நிர்வாகம் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட பயணிகள்ரெயிலை இயக்க முடிவு செய்தது. ஆனாலும் இவற்றை சிறப்பு விரைவுரெயிலாகவே இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் மதுரை-செங்கோட்டை இடையே பயணிகள்ரெயில் முன்பதிவில்லாத விரைவுரெயிலாக நேற்று முதல் சேவையை தொடங்கியுள்ளது.

வரவேற்பு

இந்த நிலையில் மதுரையில் இருந்து சிவகாசிக்கு நேற்று காலை 8.20 மணிக்கு வந்த பயணிகள் ரெயிலை அசோகன் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசாரும், மாநில நிர்வாகி பார்த்தசாரதி தலைமையில் பா.ஜனதாவினரும் திரண்டு நின்று வரவேற்றனர். ெரயிலை ஓட்டி வந்த டிரைவருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினர்.நிகழ்ச்சியில் காங்கிரஸ், பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ராஜபாளையம்ரெயில் நிலையத்தை அந்த ரெயில் காலை 9 மணிக்கு வந்தடைந்தது. அங்கு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் தலைமை தாங்கி ரெயில் என்ஜின் டிரைவருக்கு, உதவி டிரைவர் ஆகிய இருவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் ராஜபாளையம்ரெயில் பயனாளர் அமைப்பு நிர்வாகிகள் ஜகநாத ராஜா, விஜய், விக்னேஷ், குருசாமி ராஜா கலந்து கொண்டனர். 18 மாதத்துக்கு பிறகு மதுரை-செங்கோட்டை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டதற்கு பயணிகள் வரவேற்று உள்ளனர். அதே நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் கட்டணம் என்பதால் குறைந்த பயணிகளே ரெயிலில் பயணித்தனர். தொடர்ந்து விரைவு ரெயில் கட்டணத்தில் இயக்கினால் பயணிகளுக்கு முழு பலன் கிடைக்காது.
கோரிக்கை
எனவே தென்னக ெரயில்வே நிர்வாகம் மதுரை-செங்கோட்டை இடையே பயணிகள் ெரயிலை சாதாரண பயணிகள் ெரயிலாக இயக்க நடவடிக்கை எடுப்பதுடன் தினசரி மூன்று முறை இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று ஈரோடு பயணிகள் ரெயிலையும் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
 இந்த இரு பயணிகள் ெரயிலும் தான் தென்மாவட்ட வணிகர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.



Next Story