வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு பிடிபட்டது


வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 31 Aug 2021 1:54 AM IST (Updated: 31 Aug 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

பனவடலிசத்திரம் அருகே வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு பிடிபட்டது.

பனவடலிசத்திரம்:
பனவடலிசத்திரம் அருகே உள்ள தெற்கு பனவடலி விலக்கு அருகே முருகன் என்பவருக்கு சொந்தமான வீட்டுக்குள் 6 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு புகுந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி விஜயன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து கட்டுவிரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர்.

Related Tags :
Next Story