அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகரில் கடந்த 23-ந்தேதி தனியார் வீட்டுமனையில் தனியார் ஆழ்குழாய் நிறுவனம் சார்பில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நடந்தது. இதில் போர்வேல் எந்திரத்தை ஒடிசா மாநிலம், நவராங்கபூரை சேர்ந்த சாம்ப்ரோ(வயது 27) என்பவர் இயக்கினார். அப்போது எந்திரத்தின் மேல் பகுதியில் உள்ள சென்சார் யூனிட் திடீரென்று கழன்று அவர் மீது விழுந்தது. இதில் தலை, இடுப்பு பகுதியில் படுகாயம் அடைந்த அவரை உடனே அக்கம், பக்கத்தினர் மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து தனியார் ஆழ்குழாய் நிறுவன மேலாளர் சஞ்சீவி அருப்புக்்கோட்டை டவுன் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.