மத்திய அரசின் திட்ட பணிகளுக்கு மதிப்பீடு அதிகமாக உள்ளதால் திருத்தி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது; ஈரோட்டில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி


மத்திய அரசின் திட்ட பணிகளுக்கு மதிப்பீடு அதிகமாக உள்ளதால் திருத்தி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது; ஈரோட்டில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி
x
தினத்தந்தி 31 Aug 2021 2:16 AM IST (Updated: 31 Aug 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் திட்ட பணிகளுக்கான மதிப்பீடு அதிகமாக உள்ளதால் திருத்தி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்று ஈரோட்டில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

ஈரோடு
மத்திய அரசின் திட்ட பணிகளுக்கான மதிப்பீடு அதிகமாக உள்ளதால் திருத்தி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்று ஈரோட்டில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
தேங்காய்
தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 98 சதவீதமாக குறைந்துள்ளது. எனினும் இந்த வைரஸ் முழுமையாக ஒழிக்கப்படவேண்டும்.
ஈரோடு வருவாய் மாவட்டத்தின் பகுதிகளில் மத்திய அரசின் திட்டங்கள் நடைபெறுவது குறித்து மதிப்பாய்வு குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து, தேங்காய் பருப்பாக கொள்முதல் செய்வதை, முழு தேங்காயாக கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனு பெறப்பட்டு உள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திட்ட பணிகள்
மத்திய அரசின் திட்ட பணிகளுக்கான மதிப்பீடுகள் அதிகளவில் உள்ளதால், அதனை திருத்தி அமைக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் மக்களது வரிப்பணங்கள் வீணாகாமல், கூடுதல் திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பாக அமையும்.
போலி பத்திரிகையாளர்களை களைவதற்கு, தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது. அதற்கான முழு விவரமும் எங்களுக்கு வந்து சேரவில்லை. வந்ததும் இதுபற்றி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி, பத்திரிகையாளர்கள் நலன் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும்.
தடுப்பணை
நீர் பாசன துறையின் மானிய கோரிக்கையின்போது, முதல்-அமைச்சர் வழிகாட்டுதல்படி தமிழகத்தில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும் என நீர் பாசனத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி, தேவையான இடங்களில் அணை கட்டப்பட்டு, நிலத்தடி நீர் சேமிக்கப்படும். வால்பறை பகுதிகளில் தொலைத்தொடர்பு, இணையதள பிரச்சினை உள்ளதை ஏற்கனவே ஆய்வு செய்தோம். அதேபோல், ஈரோடு மாவட்டம் பர்கூர், கடம்பூர் மலைப்பகுதியில் இதே பிரச்சினை உள்ளது. மாநில அரசு மூலம் நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியையும் பெற்று நடவடிக்கை எடுப்போம்.
ஊரக வளர்ச்சி துறைகளில் ஒவ்வொரு ஊராட்சியிலும் நூலகம் செயல்படுத்தப்பட்டது. தற்போது அதனை மீண்டும் செயல்படுத்த தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கூடங்கள் திறப்பையொட்டி ஆசிரிய -ஆசிரியைகள், பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம். ஆனால், கர்ப்பிணிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பரிசீலனை செய்யலாம். பிற நோய்களால் சிகிச்சை பெற்று வரும் ஆசிரியர்கள், மருத்துவரின் ஆலோசனை பெற்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

Next Story