பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி


பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி
x
தினத்தந்தி 31 Aug 2021 2:32 AM IST (Updated: 31 Aug 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வல்லம்;
தஞ்சை அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். 
மனநிலை பாதிக்கப்பட்டவர்
தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த முதியவர்  காட்டுப்பகுதியில் தனியாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  இவருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவருடைய மூத்த மகள் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்த பெண் தனது தந்தையுடன் மாடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள காட்டு பகுதிக்கு ஓட்டி செல்வது வழக்கம். நேற்று வழக்கம் போல் முதியவர் மற்றும் அவரது மகள் மாடுகளை மேய்ச்சலுக்காக காட்டு பகுதிக்கு ஒட்டி சென்றனர். அங்கு மகள் ஒரு பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். அவரது தந்தையான முதியவர் வேறு பகுதிக்கு சென்று விட்டார். 
சிகிச்சை 
இந்தநிலையில் அங்கு வந்த சென்னம்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்த மாரிமுத்து  மகன் கோவிந்தராஜ் (வயது26) மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த  மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கி அவரை  பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட பெண் சத்தம் போட்டார். மகளின் அலறல் சத்தம் கேட்ட முதியவர் சம்பவ இடத்துக்கு வந்தார். உடனே சம்பவ இடத்தில் இருந்து கோவிந்தராஜ் தப்பி ஓடிவிட்டார். ரத்தக்காயங்களுடன் பெண் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு 
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
கைது
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நேற்றிரவு தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வல்லம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story