கர்நாடகத்தில் புதிதாக 973 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 973 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 31 Aug 2021 2:37 AM IST (Updated: 31 Aug 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 973 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 219 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 973 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 48 ஆயிரத்து 228 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 293 ஆக உயர்ந்துள்ளது.

  1,324 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியதை அடுத்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 92 ஆயிரத்து 517 ஆக அதிகரித்துள்ளது. 18 ஆயிரத்து 392 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பெங்களூரு நகரில் 264 பேர், தட்சிண கன்னடாவில் 193 பேர், ஹாசனில் 74 பேர், குடகில் 42 பேர், மைசூருவில் 73 பேர், உடுப்பியில் 98 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகர், பெலகாவி, உடுப்பியில் தலா 3 பேர் என மொத்தம் 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  கர்நாடகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story