கடைக்குள் புகுந்து பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு
அஞ்சுகிராமம் அருகே கடைக்குள் புகுந்து பெண்ணிடம் 9 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அஞ்சுகிராமம்:
அஞ்சுகிராமம் அருகே கடைக்குள் புகுந்து பெண்ணிடம் 9 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெண்ணிடம்...
அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் மயிலாடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 50). இவர் கல் சிற்பக்கூடம் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி (45), அந்த பகுதியில் கல் சிற்ப பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் சாந்தியின் கடைக்கு வந்தனர். அவர்கள், பொருட்கள் வாங்குவது போல் நடித்து சாந்தியிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
நகை பறிப்பு
அப்போது, சாந்தி எதிர்பாராத நேரம் அந்த மர்ம நபர்கள் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
பின்னர், இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டேனியல் அருள் சேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story