சேலம் மாவட்டத்தில் 15 தாசில்தார்கள் இடமாற்றம்


சேலம் மாவட்டத்தில் 15 தாசில்தார்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 31 Aug 2021 3:30 AM IST (Updated: 31 Aug 2021 3:30 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 15 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 15 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தாசில்தார்கள்
சேலம் மாவட்டத்தில் தாசில்தார் நிலையில் உள்ள 15 அதிகாரிகளை இடமாற்றம் செய்து கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சேலம் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்த சுந்தர்ராஜன், ஓமலூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், கலால் உதவி ஆணையர் அலுவலக மேலாளர் சுமதி, நில எடுப்பு தனி தாசில்தாராகவும், எடப்பாடி தாசில்தார் முத்துராஜா, ஓமலூர் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன், என்.எச்.68 நில எடுப்பு தனி தாசில்தாராகவும், காடையாம்பட்டி தாசில்தார் அன்னபூரணி, ஆத்தூர் வன நிர்ணய அலுவலராகவும், மேட்டூர் தாசில்தார் சுமதி, அகல ரெயில்பாதை நில எடுப்பு தனி தாசில்தாராகவும், சேலம் முத்திரை கட்டண தனி தாசில்தார் மாதேஸ்வரன், சேலம் கனிம தனி தாசில்தாராகவும், அங்கிருந்த ரவிக்குமார், ஏற்காடு தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நில எடுப்பு தனி தாசில்தார்
இதேபோல், சேலம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் ஜாகீர் உசைன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் நில எடுப்பு தனி தாசில்தாராகவும், ஆத்தூர் முத்திரை கட்டண தனி தாசில்தார் சித்ரா, சேலம் அகதிகள் மறுவாழ்வு தனி தாசில்தாராகவும், அங்கிருந்த முருகேசன், கோட்ட கலால் அலுவலராகவும், கலால் அலுவலகத்தில் பணிபுரிந்த ரவிச்சந்திரன், தனி மாவட்ட வருவாய் அலுவலரின் உதவியாளராகவும், அங்கு பணியாற்றிய செந்தில்குமார், எடப்பாடி சமூக பாதுகாப்பு திட்டம் தனி தாசில்தாராகவும், மேட்டூர் கோட்ட கலால் அலுவலர் அருள்குமார், சேலம் ஆதி திராவிடர் நல தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

Next Story