கோவில்களில் சிறப்பு பூஜை
கோவில்களில் சிறப்பு பூஜை
கூடலூர்
கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
கிருஷ்ண ஜெயந்தி
ஆவணி மாதம் அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாக புராண வரலாறு கூறுகிறது. இதையொட்டி அன்றைய நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஆனால் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் ஜெயந்தி ஊர்வலம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த அதிகாரிகள் தடை விதித்தனர். பெருமாள், மகாவிஷ்ணு உள்ளிட்ட கோவில்களில் அதிகாலை முதல் அலங்கார சிறப்பு, பூஜைகள் நடைபெற்றது. இருப்பினும் பக்தர்கள் வருகை மிக குறைவாக காணப்பட்டது.
வேடமணிந்த சிறுவர்-சிறுமிகள்
வழக்கமாக கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு சிறுவர், சிறுமியர் ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை பல்வேறு ஆன்மீக அமைப்புகளால் நடைபெறும். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளால் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் கிருஷ்ண ஜெயந்தி விழா களை இழந்தது.
கூடலூர் பகுதியில் உள்ள தொரப்பள்ளி ராமர், கோழிப்பாலம் சாஸ்தாபுரி அய்யப்பன், மண்வயல் மற்றும் பொன்னானியில் உள்ள மகாவிஷ்ணு, கம்மாத்தி வாகேஸ்வரி கோவிலில் உள்ள கிருஷ்ணர் சன்னதி உள்பட பெரும்பாலான கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அங்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்ட சிறுவர், சிறுமியர்கள் பலர் வந்திருந்தனர்.
Related Tags :
Next Story