சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
ஆரணி
ஆரணியை அடுத்த புலவன்பாடி கிராமத்தை சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் ராமன் (வயது 25). நெசவுத் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச்சென்று அங்குள்ள கோவில் அருகே வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அழுது கொண்டிருந்த சிறுமியிடம் கேட்டபோது நடந்ததை கூறியிருக்கிறாள்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்தார்.
சிறுமி ஆரணி அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story