ராணிப்பேட்டை மாவட்டஉள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு. 6,67,237 வாக்காளர்கள் உள்ளதாக கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 6,67,237 வாக்காளர்கள் இருப்பதாக கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 6,67,237 வாக்காளர்கள் இருப்பதாக கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.
வரைவு வாக்காளர் பட்டியல்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ராணிப்பேட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021-க்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணையின்படி, ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் உள்ள 288 கிராம ஊராட்சிகளிலும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 1,410 வாக்குச்சாவடி மையங்களில் 6 லட்சத்து 67 ஆயிரத்து 237 வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்ய உள்ளனர்.
மாவட்டத்தில் 2,220 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 288 ஊராட்சி மன்ற தலைவர்கள், 127 ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் 13 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கான நேரடித் தேர்தல் நடைபெற உள்ளது.
ஒன்றியம் வாரியாக
அரக்கோணம் ஒன்றியத்தில் ஆண் வாக்காளர்கள் - 58,026, பெண் வாக்காளர்கள் - 60,692, மூன்றாம் பாலினத்தவர் - 17 என மொத்தம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 735 வாக்காளர்களும், ஆற்காடு ஒன்றியத்தில் ஆண் வாக்காளர்கள் - 42,167, பெண் வாக்காளர்கள் - 44,479, மூன்றாம் பாலினத்தவர்-8 என மொத்தம் 86 ஆயிரத்து 654 வாக்காளர்களும் உள்ளனர்.
காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் ஆண் வாக்காளர்கள் -25,214, பெண் வாக்காளர்கள் -26,344, மூன்றாம் பாலினத்தவர் -1 என மொத்தம் 51 ஆயிரத்து 559 வாக்காளர்களும், நெமிலி ஒன்றியத்தில் ஆண் வாக்காளர்கள் - 48,772, பெண் வாக்காளர்கள் - 50,788, மூன்றாம் பாலினத்தவர் - 3. ஆக மொத்தம் 99 ஆயிரத்து 563 வாக்காளர்களும் உள்ளனர்.
6,67,237 வாக்காளர்கள்
அதேபோன்று சோளிங்கர் ஒன்றியத்தில் ஆண் வாக்காளர்கள் -48,426, பெண் வாக்காளர்கள்-49,228, மூன்றாம் பாலினத்தவர்- 4 என மொத்தம் 97 ஆயிரத்து 658 வாக்காளர்களும், திமிரி ஒன்றியத்தில் ஆண் வாக்காளர்கள் -42,271, பெண் வாக்காளர்கள் -43,451 ஆக மொத்தம் 85 ஆயிரத்து 722 வாக்காளர்களும் உள்ளனர்.
வாலாஜா ஒன்றியத்தில் ஆண் வாக்காளர்கள் -61,825, பெண் வாக்காளர்கள்-65,516, மூன்றாம் பாலினத்தவர் -5 என மொத்தம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 346 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 3,26,701 ஆண் வாக்காளர்கள், 3,40,498 பெண் வாக்காளர்கள், 38 மூன்றாம் பாலினத்தவர என மொத்தம் 6,67,237 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இருந்து வருகிற 3-ந் தேதி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story