குடியாத்தம் அருகே வாழைத் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள்
வாழைத் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள்
குடியாத்தம்
குடியாத்தம் அருகே தமிழக எல்லைப்பகுதியில் சைனகுண்டா கிராமத்தை தொடர்ந்து ஆந்திர மாநில எல்லை பகுதி தொடங்குகிறது. ஆந்திர மாநில எல்லையில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன, அடிக்கடி தமிழக எல்லையில் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள விளை நிலங்களுக்குள் யானைகள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
நேற்று அதிகாலை 5 யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று மோர்தானா பகுதியிலிருந்து வனப்பகுதிக்குள் நுழைந்து குடியாத்தம் அருகே கொட்டாரமடுகு கிராமத்தில் ஜெகதீஸ்வரன் என்பவரது வாழைத் தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு ஏராளமான வாழை மரங்களை சேதப்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனச்சரக அலுவலர் சரவணனபாபு உத்தரவின் பேரில் நேற்று காலை வனத்துறையினர் யானைகள் சேதப்படுத்திய வாழைத் தோட்டத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story