வாணியம்பாடி, ஆம்பூரில் சாலைமறியல் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கைது
வாணியம்பாடி, ஆம்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி, ஆம்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரில் அமைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து வாணியம்பாடி பஸ் நிலையத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், நகர செயலாளர் சதாசிவம் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கலந்துகொண்ட உதயேந்திரம் பேரூராட்சி செயலாளர் சரவணன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஆர்.வி.குமார் உள்பட 75-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது கைது செய்தனர்.
ஆம்பூர்
ஆம்பூர் பஸ் நிலையம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அ.தி.மு.க. நகர செயலாளர் எம்.மதியழகன் தலைமையில் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகர துணை செயலாளர் கராத்தே மணி, நகர இணைச் செயலாளர் அன்பரசன், தகவல் தொழில்நுட்ப மாவட்ட பொருளாளர் ஆனந்த்பாபு மற்றும் கட்சியினர் பலர் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து சுமார் 30 பேரை ஆம்பூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையம் அருகே முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் என்.திருப்பதி, பி.கே.சிவாஜி, முன்னிலை வகித்தனர். தம்பா கிருஷ்ணன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர், தொடங்கி வைத்தார்.
இதில் கந்திலி ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் டி.எம்.ரவி, நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின் இடையே கிருஷ்ணகிரி -வாணியம்பாடி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம், தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story