வேலூர் மாவட்டத்தில் 7.16 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வரைவு பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 984 வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டார்.
வேலூர்
ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 984 வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டார்.
7 ஊராட்சி ஒன்றியம்
தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 247 பஞ்சாயத்துக்கு தலைவர்கள், 2,079 கிராம ஊராட்சி வார்டுகள், 138 ஒன்றிய கவுன்சிலர்கள், 14 மாவட்ட கவுன்சிலர்கள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சட்டமன்ற தொகுதி வாரியான வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, மறு சீரமைக்கப்பட்ட வார்டு எல்லைக்குட்பட்டு வார்டு வாரியான ஆண், பெண் வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அதன்படி வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 1,331 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
7.16 லட்சம் வாக்காளர்கள்
இந்தநிலையில், மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டார்.
இந்த பட்டியல் கிராம பஞ்சாயத்து அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைக்கப்படும். இதில் தங்கள் பெயர் உள்ளதா என பொதுமக்கள் பார்வையிடலாம்.
மாவட்டத்தில் உள்ள வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கணியம்பாடி, காட்பாடி, கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 3 லட்சத்து 48 ஆயிரத்து 898 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 68 ஆயிரத்து 6 பெண் வாக்காளர்களும், இதர பிரிவினர் 80 பேரும் என மொத்தம் 7 லட்சத்து 16 ஆயிரத்து 984 வாக்காளர்கள் உள்ளனர்.
வருகிற 3-ந் தேதி அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் பட்டியல் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story