விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2021 9:06 PM IST (Updated: 31 Aug 2021 9:06 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அவினாசி, 
அவினாசியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று புதிய பஸ் நிலையம் அருகில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அன்னூர் ஓட்டர்பாளையம் விவசாயி கோபால்சாமி மீது பதியப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக்கோரியும், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, மற்றும் கிராம நிர்வாக உதவியாளர், முத்துசாமி ஆகியோரை கைது செய்து நிரந்தர பணி இடை நீக்கம் செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பல்வேறு விவசாயிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Next Story