மணப்பாட்டில் மீனவருக்கு அரிவாள் வெட்டு
மீனவருக்கு அரிவாள் வெட்டு
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் அருகே உள்ள மணப்பாடு வேளாங்கண்ணி மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 34). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அந்தோணி. மீன்பிடிதொழிலாளர்கள். இதில் அந்தோணி அடிக்கடி மதுபோதையில இருதயராஜை அவதூறாக பேசி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மணப்பாடு ஆயத்தெரு கடற்கரை பந்தலில் இருந்த இருதயராஜை அந்தோணி மீண்டும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனை இருதயராஜ் தட்டிகேட்டுள்ளார் ஆத்திரமடைந்த அந்தோணி அவரை மறைத்து வைத்திருந்த அரிவாளால் சராமாரியாக வெட்டினார். படுகாயமடைந்த இருதயராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடி அந்தோணியை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story