குடவாசலில் வாடகைக்கு எடுத்த காரை குத்தகைக்கு விட்டு மோசடி செய்தவர் கைது


குடவாசலில் வாடகைக்கு எடுத்த காரை குத்தகைக்கு விட்டு மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 31 Aug 2021 9:23 PM IST (Updated: 31 Aug 2021 9:23 PM IST)
t-max-icont-min-icon

குடவாசலில் வாடகைக்கு எடுத்த காரை குத்தகைக்கு விட்டு மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

குடவாசல்:-

குடவாசலில் வாடகைக்கு எடுத்த காரை குத்தகைக்கு விட்டு மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

வாடகை கார்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் குயவன் பாளைய தெருவை சேர்ந்தவர் பாபு(வயது 50). இவர் சென்னையை சேர்ந்த கோபால் என்பவரிடம் மாதந்தோறும் வாடகை தருவதாக கூறி காரை வாடகைக்கு எடுத்து உள்ளார். 
சில மாதங்களுக்கு பின்னர் அந்த காரை மயிலாடுதுறையை சேர்ந்த அப்துல் அஜீஸ் மகன் ஜெகபர் அலியிடம் ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டு உள் குத்தகைக்கு விட்டுள்ளார். 

குத்தகைக்கு விட்டு மோசடி

அந்த கார், ராஜஸ்தானில் வாடகைக்கு ஓடி உள்ளது. அங்கு சொந்த வேலைக்காக சென்ற காரின் உரிமையாளர் கோபால் தனது காரை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
இதுதொடர்பாக கோபால் அங்கு உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்து தனது கார் என்பதற்கான ஆவணங்களை அளித்து காரை மீட்டு கொண்டு வந்து விட்டார். இதையடுத்து ஜெகபர் அலி, பாபுவிடம் குத்தகை பணத்தை கேட்டார். 

கைது

அப்போது பணம் கொடுக்க முடியாது என கூறி பாபு, ஜெகபர் அலியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குடவாசல் போலீசில் ஜெகபர் அலி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். 
விசாரணையில் பாபு, காரை வாடகைக்கு எடுத்து அதை குத்தகைக்கு விட்டு மோசடி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர். 

Next Story